மேலும் செய்திகள்
வெவ்வேறு விபத்துகளில் தம்பதி உட்பட 6 பேர் பலி
27-Oct-2026
மாலுார்: கோலார் மாவட்டம் மாலுார் மாஸ்தி அருகே ரவுடி அனகரஹள்ளி பிரதாப் என்ற விஸ்வநாத் பிரதாப் கவுடா மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர். காரை வழிமறித்து மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் பிரதாப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குண்டுகள் பாய்ந்ததில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர், அவரது அண்ணன் நரேந்திரா மீது இருவர் காயமடைந்தனர். ஹொஸ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மாஸ்தி போலீசார் விசாரித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஷியானமங்களா கிராமத்தைச் சேர்ந்தவரின் கொலை வழக்கில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
27-Oct-2026