உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / யோகா தினத்துக்காக மைசூரு தயார்! 15,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு

யோகா தினத்துக்காக மைசூரு தயார்! 15,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு

மைசூரு: இன்று நடக்கும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்காக, மைசூரு அரண்மனை வளாகம் தயார் நிலையில் உள்ளது.இன்று 11வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மைசூரில் 2022ல் நடந்த யோகா தினத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பின், யோகா பயிற்சி செய்ய, வெளிநாட்டில் இருந்தும் வருகின்றனர்.உலகளவில் யோகா ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது.கலாசார நகரம், அரண்மனை நகரம் என்று பெயர் பெற்றுள்ள மைசூரு, யோகாவில் நாட்டின் தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மைசூரில் யோகா தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு, 'ஒரு உலகம், ஒரு சுகாதாரத்துக்காக யோகா' என்ற கருபொருளில் நடக்கிறது. இம்முறை, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 7,000 பேரும், கல்லுாரிகளை சேர்ந்த 1,000 மாணவ - மாணவியர் உட்பட 15,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக அரண்மனை வளாகத்தில், 40 அடி அகலத்தில், 25 அடி நீளத்தில் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. மெகா சைஸ் எல்.இ.டி., திரை பொருத்தப்பட்டுள்ளது.இத்துடன் 60 சிறுசிறு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், யோகா ஆசிரியர் இருந்தபடி, ஆசனங்களை செய்து காண்பிப்பர்.இதில் பங்கேற்போருக்காக, மைசூரு மாநகராட்சி குடிநீர் வசதி செய்துள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதில் பங்கேற்போருக்காக, சாமுண்டி மலை ஷேத்திர மேம்பாட்டு ஆணையம், உணவு ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி