உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புதிய சாதனை படைத்த கூலி

புதிய சாதனை படைத்த கூலி

பெங்களூரு: கர்நாடகாவில் கூலி படம் வெளியான முதல் நாளில் மட்டும் 14.20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சினிமா வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினி, அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கூலி படம், கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பெங்களூரில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய, முதல் 30 நிமிடங்களிலேயே 66 காட்சிகளுக்கான 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இது பெங்களூரு பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை. கே.ஜி.எப்., 2, லியோ படங்களின் சாதனையை முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது. கூலி படம் வெளியாகி, கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது. இருப்பினும், பெங்களூரில் உள்ள பல தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமைக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்தன. இப்படம் வெளியான 14ம் தேதி மட்டுமே கர்நாடகாவில் 14.20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது விஜயின் லியோ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக சினிமா வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை