ரூ.50 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை
கால்நடை பராமரிப்பு விலங்குகள் நலன், பொதுமக்கள் பாதுகாப்பை சமநிலையில் பேணும் வகையில், கால்நடை பராமரிப்பு துறை எடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தெருநாய்களை பராமரிக்க 2 கோடி ரூபாய் செலவில், சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். தெருவில் வசிக்கும் நாய்கள், வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு விரைவான மருத்துவ சேவை கிடைக்க, 50 லட்சம் ரூபாய் செலவில், புதிய கால்நடை மருத்துவமனை திறக்கப்படும். உயிரிழக்கும் கால்நடைகளுக்கு கண்ணியமான முறையில் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், மின் தகன மையம் அமைக்க, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு. தெருநாய்களை நிர்வகிக்கவும், இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கும், தடுப்பூசி போடவும், 80.94 லட்சம் ரூபாய் செலவழிக்க உள்ளோம். 58 லட்சம் ரூபாய் செலவில் 30,432 நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அவற்றின் இருப்பிடத்தை காண்பிப்போம். இதனை டிஜிட்டல் மயமாக்க உள்ளோம்.