உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை 

 திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை 

சிக்கபல்லாபூர்: திருமணமான ஐந்து மாதங்களில், புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் பாஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரூபா, 30. இவருக்கும், சிக்கபல்லாபூரின் ஹொன்னேனஹள்ளி கிராமத்தின் முனிராஜுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. நேற்று காலை கணவர் வீட்டில் ரூபா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவரது அறையில் கடிதமும் சிக்கவில்லை. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொடுமைப்படுத்தியதால், ரூபா தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். ரூபாவை தற்கொலைக்கு துாண்டிய முனிராஜ், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிக்கபல்லாபூர் ரூரல் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை