உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தார்வாட்: ஹோல்டிகோட் கிராமத்தில் சட்டவிரோதமான மது விற்பனை நடந்து வந்தது. இது குறித்து, மாவட்ட பொறுப்பு அமைச்சரான சந்தோஷ் லாட்டிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் கடைகளை முற்றுகையிட்டனர். பெங்களூரு ரூரல்: தொட்டபல்லாபூர், யத்தனஹள்ளியில் ஸ்ரீ பெனகப்பா கோவில் உள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் உள்ள பொக்கிஷங்களை திருடுவதற்காக யுகாதியன்று திருடர்கள் சிலர் முயற்சித்து, தோல்வியுற்று தப்பி சென்றனர். பெங்களூரு: ஆடுகோடியை சேர்ந்தவர் ஹேமா, 44. கர்ப்பிணியாக இருந்தவர் கடந்த சனிக்கிழமை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் கூறினார். ஆனால், ஹேமா தற்கொலை செய்யவில்லை; கணவரால் கொலை செய்யப்பட்டு உள்ளார் என ஹேமா வீட்டார் ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர்.பெங்களூரு: நஞ்சப்பா லே - அவுட், பைதரஹள்ளி விக்னேஸ்வரா நகரில் உள்ள மதுக்கடையில், கடந்த மாதம் 27ம் தேதி, இரு குழுவினருக்கு இடையே சண்டை நடந்தது. இதில் ஏழு பேர் மீது பைதரஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.பெங்களூரு: முதல்வரின் அமைச்சகத்தில் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 30 பேர் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பெங்களூரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 30 பேர், எந்த ஒரு முன் அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.ஹூப்பள்ளி: ரம்ஜான் தொழுகையின் போது ஹிந்து அமைப்புகளை இழிவுபடுத்தும் விதமான பதாதைகளை பயன்படுத்தியதாக ஹிந்து அமைப்பினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ., தலைவர் அப்துல் கபூர் குரஹட்டி மீது, ஹூப்பள்ளி புறநகர் போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ., தலைவர் மீது வழக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ