உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

 சுகாதார அமைச்சர் காதர் நேற்று டில்லிக்கு சென்றிருந்தார். கர்நாடக பவனில் தங்கியிருந்த அவரை, கர்நாடக மண்பாண்ட மேம்பாட்டு கழக தலைவர் டாக்டர் சீனிவாசன் சந்தித்தார். சுகாதார துறை தொடர்பாக ஏதோ கேள்வி எழுப்பினார். கோபம் அடைந்த காதர், சீனிவாசனை அரசு டாக்டர் என்று நினைத்து, 'பணி நேரத்தில், டில்லியில் உங்களுக்கு என்ன வேலை. உங்களை 'சஸ்பெண்ட ் ' செய்கிறேன்' என்று கோபமாக பேசினார். சீனிவாசன் டாக்டர் இல்லை என்று தெரிந்ததும் காதர் அமைதியானார்.  பெங்களூரு விதான் சவுதாவில், முதல்வர் சிவகுமாரை, கர்நாடக கான்ட்ராக்டர்கள் சங்கத்தினர் நேற்று சந்தித்தனர். நிலுவையில் உள்ள 37,370 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  ''ஷராவதி நீரேற்று சேமிப்புத் திட்டம் குறித்து அறியாமலேயே மக்கள் அத்திட்டத்தை எதிர்க்கின்றனர். கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்,'' என மின்சார துறை அமைச்சர் ஜார்ஜ் கூறினார்.  ''எஸ்.ஐ.ஆர்., படிவங்களை மக்களுக்கு விநியோகம் செய்வதில் பாகுபாடு காட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. பா.ஜ., தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,'' என்று, எம்.பி., பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.  சிக்கமகளூரின் கடூர் தாலுகா நிடகட்டா கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குள் நுழைய, கடந்த 100 ஆண்டுகளாக எஸ்.சி., சமூகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அவர்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக பல கட்ட பேச்சு நடந்தது. பிற சமூக தலைவர்கள், போலீசார் நடத்திய பேச்சில், எஸ்.சி., சமூகத்தினர் கோவிலுக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. நேற்று கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.  மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, கர்நாடக கிராம வளர்ச்சி துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே டில்லியில் நேற்று சந்தித்தார். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் எத்தினஹொலே கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு 4,708 கோடி ரூபாய் விடுவிக்க கோரிக்கை வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ