உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செய்திகள் சில வரிகளில்...

 செய்திகள் சில வரிகளில்...

* வாலிபர் கொலை மைசூரு டி.நரசிபுரா தாலுகா அலகுடு கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ், 25. இவர், நேற்று டி.நரசிபுரா ஆர்.எம்.சி., வளாகத்தில் சென்று கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்களான கெஞ்சப்பா, சஞ்சு, மனு ஆகிய மூன்று பேர், டி.நரசிபுரா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். நிலத்தகராறு தொடர்பான முன் விரோதம் காரணமாக கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என, இறந்த சுபாஷின் குடும்பத்தினர் கூறினர். விசாரணை தொடர்வதாக மாவட்ட எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதண்டி கூறினார். * பழிவாங்க திட்டம் பஜ்ரங் தள் தொண்டர் சுஹாஷ் ஷெட்டி, கடந்த ஆண்டு ஆறு பேர் கொண்ட கும்பலால் மங்களூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது வன்முறையாக வெடித்தது. இவ்வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்கிறது. இந்நிலையில், சுஹாசின் கொலைக்கு பழிவாங்க, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு வந்தது அம்பலமாகி உள்ளது. கூலிப்படை மூலம் பழிவாங்க திட்டமிட்டதாகவும், இதற்காக 24 லட்சம் ரூபாய் செலவு செய்ய முற்பட்டதையும், பஜ்பே போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக பஜ்பே போலீசார், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், விரைவில் கைது செய்யப்படுவர் என, மங்களூரு போலீஸ் கமிஷனர் சுதிர் குமார் தெரிவித்தார். * மாணவர்கள் அஞ்சலி பாகல்கோட் மாவட்டம், நீலாநகரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் பசவராஜ் ராமப்பா ஷெட்டி, 53. இவர் இரண்டு வாரங்களுக்கு முன் பைக்கில் செல்லும் போது, கார் ஒன்று மோதியது. பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், நேற்று காலை பள்ளி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மலர் துாவி இறுதி அஞ்சலியை செலுத்தினர். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பார்த்தவர்கள் கண்ணீர் சிந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை