உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போதைப்பொருள் பறிமுதல் நைஜீரிய நபர் கைது

போதைப்பொருள் பறிமுதல் நைஜீரிய நபர் கைது

பெங்களூரு,: கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., - பி.டி., ஊழியர்களுக்கு போதைப்பொருள் விற்ற நைஜீரிய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.பெங்களூரு, சோழதேவனஹள்ளி பகுதியின் வீடு ஒன்றில் வசிக்கும் நைஜீரிய நபர்கள், போதைப்பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சி.சி.பி., போலீசார் நேற்று முன் தினம், அங்கு சோதனை நடத்தினர்.நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் போதைப்பொருள், ஒரு பைக், ஒரு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நைஜீரிய நபர் ஒருவரை கைது செய்தனர்.தொழில் விசாவில் இந்தியாவுக்கு வந்த நைஜீரிய நபர், தன் நாட்டுக்கு திரும்பாமல் பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கிறார். கூட்டாளியுடன் சேர்ந்து கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு போதைப்பொருள் விற்றது, விசாரணையில் தெரிய வந்தது.இவருடன் இருந்த நைஜீரிய கூட்டாளி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ