கபாப் தயாரிக்க தரமற்ற சிக்கன் ரெஸ்டாரென்டுக்கு நோட்டீஸ்
பெங்களூரு: பெங்களூரின் பிரபலமான 'எம்பயர்' ரெஸ்டாரென்டில் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் கபாப், பாதுகாப்பானது அல்ல என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெங்களூரு காந்திநகரில் உள்ள எம்பயர் ரெஸ்டாரென்டில், கபாப்களில் செயற்கை நிறம் பயன்படுத்துவதாக தகவல் வந்தது. எனவே ஜூன் 27ம் தேதியன்று, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், அந்த ரெஸ்டாரென்டில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தயாரிக்கப்பட்ட கபாப் மாதிரியை சேகரித்து, மாநில உணவு தரம் ஆய்வகத்துக்கு அனுப்பினர். தற்போது அறிக்கை வந்துள்ளது. கபாபில் செயற்கை நிறம் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதற்கு பயன்படுத்தப்பட்ட கோழி இறைச்சி தரமற்றது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, ரெஸ்டாரென்ட்டுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.