உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதல்வர் மாற்றம் குறித்து பேசிய காங்.,கின் இருவருக்கு நோட்டீஸ்

முதல்வர் மாற்றம் குறித்து பேசிய காங்.,கின் இருவருக்கு நோட்டீஸ்

பெங்களூரு: முதல்வர் மாற்றம் குறித்து பேசிய, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத், முன்னாள் எம்.பி., சிவராமேகவுடாவுக்கு, விளக்கம் கேட்டு கட்சி ஒழுங்கு குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. துமகூரு குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத். இவர், முதல்வர் மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்கையில், துணை முதல்வர் சிவகுமார் முதல்வராக வேண்டும். இதை கட்சி மேலிடம் பரிசீலிக்க வேண்டும் என்றார். இதுபோல மாண்டியா முன்னாள் எம்.பி., சிவராமேகவுடாவும், சிவகுமார் முதல்வராக வேண்டும். நவம்பர் அல்லது டிசம்பரில் அவர் முதல்வராவது உறுதி. யாராலும் தடுக்க முடியாது என்றார். முதல்வர் மாற்றம் குறித்து பல மாதங்களாக, எந்த விவாதமும் நடக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ரஹ்மான் கான், முதல்வர் மாற்றம் குறித்து பேசிய ரங்கநாத், சிவராமேகவுடாவுக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசில், 'கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் வெளியிட வேண்டாம் என்ற, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலை மீறி, முதல்வர் மாற்றம் குறித்து பேசி உள்ளீர்கள். இதற்காக ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை