மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை உயிரிழப்பு?
16-Jul-2025
சிக்கமகளூரு: குழந்தைகள் காப்பகத்தின் ஊழியர் சுடுதண்ணீரை ஊற்றியதால் படுகாயமடைந்த ஒரு வயது மூன்று மாத பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.சிக்கமகளூரு நகரின் காந்தி நகரில் அரசு சார்ந்த குழந்தைகள் காப்பகம் உள்ளது. அநாதையாக கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள், இங்கு பராமரிக்கப்படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள் குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.பராமரிப்பு மையத்தில், ஒரு வயது மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தையை தத்தெடுக்க தம்பதி ஆர்வம் காட்டினர். இதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர்.சம்பவத்தன்று குழந்தை அமர்ந்த இடத்திலேயே மலம் கழித்தது. இதனால் எரிச்சல் அடைந்த ஊழியர், குழந்தையை சுத்தம் செய்யும்போது, கொதிக்கும் தண்ணீரை குழந்தை மீது ஊற்றினார்.இதில் குழந்தையின் இடுப்பின் கீழ்ப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற ஊழியர்கள், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.குழந்தை மீது சுடுதண்ணீரை ஊற்றிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் வலியுறுத்துகின்றனர். இத்தகைய அரக்க குணம் கொண்டவரை, குழந்தைகள் காப்பக மையத்தில் பணிக்கு வைத்திருக்கக் கூடாது என எதிர்ப்பு வலுத்து வருகிறது.
16-Jul-2025