மேலும் செய்திகள்
அரசமரத்து விநாயகர் கோவில்கும்பாபிேஷகம் கோலாகலம்
01-May-2026
உத்தர கன்னடா: இயற்கை உபாதைக்காக ஆற்றங்கரைக்கு சென்றவரை, முதலை தாக்கியதில், அந்நபருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உத்தர கன்னடா தண்டேலி தாலுகா குலாகி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த், 42. இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இயற்கை உபாதைக்காக நேற்று காலை சென்றார். அப்போது அவரது காலில் முதலை திடீரென கடித்தது. இதில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்முதலையிடம் இருந்து தப்பித்து, அலறியடித்து கொண்டு சாலையை நோக்கி ஓடினார். இதை பார்த்தவர்கள், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலை குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 'பொது கழிப்பறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால், இயற்கை உபாதைக்கு ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆற்றங்கரையிலும் முதலை தொல்லை இருக்கிறது' என, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
01-May-2026