ஒரு கிலோ கோழிக்கறி ரூ.350க்கு விற்பனை
பெங்களூரு: பெங்களூரில் ஒரு கிலோ கோழிக்கறி 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பெங்களூரில் கடந்த மாதம் கோழிக்கறி கிலோ 260 முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ கோழிக்கறி 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் கிலோ 380 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது, அசைவ பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பெங்களூருக்கு கறிக்கோழியின் வருகை கணிசமாக குறைந்து உள்ளன. இதுவே, கோழிக்கறி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கறிக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.