உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஒருதலை காதல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., விரக்தி

 ஒருதலை காதல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., விரக்தி

பெங்களூரு: ''பா.ஜ.,வை நாங்கள் ஒரு தலையாக காதலிக்கிறோம்,'' என்று, குர்மித்கல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் விரக்தியாக கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: எங்கள் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மாநில தலைவர் குமாரசாமி மீது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அளவு கடந்த பாசம் உள்ளது. ஆனால் கர்நாடகா பா.ஜ., தலைவர்கள், எங்களை கணக்கில் எடுத்து கொள்வது இல்லை. சட்டசபையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும்போது, சில நேரம் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்துவது குறித்து, எங்களிடம் விவாதிப்பது இல்லை. நாங்கள் அவர் பின் சென்று, ஒரு தலையாக காதலிக்கிறோம். பட்ஜெட்டுக்கு எதிராக செம்பை வைத்து போராட்டம் நடத்துவது பற்றி, எங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான், கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும். கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் குமாரசாமி தான் முதல்வர் வேட்பாளர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை