உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மஞ்சள் வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

 மஞ்சள் வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

பெங்களூரு: 'நம்ம மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் பரபரப்பான நேரத்தில், இனி, ஏழு நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்' என, நம்ம மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.வி., சாலையில் இருந்து பொம்மசந்திரா வரையிலான 19.15 கி.மீ., நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில், பரபரப்பான நேரத்தில் ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இனி, ஏழு நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதுபோல, சாதாரண நேரத்தில் 14 நிமிடங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள், இனி, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமைகளில், 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதே வேளையில், அதிகாலை புறப்படும் முதல் ரயிலும், இரவு கடைசியாக புறப்படும் ரயிலின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை