உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஸ்லீப்பர் செல்களை அடையாளம் காண உத்தரவு

ஸ்லீப்பர் செல்களை அடையாளம் காண உத்தரவு

பெங்களூரு: ஸ்லீப்பர் செல்களை அடையாளம் காணவும், தொடர்ந்து கண்காணிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:போர் குறித்து, வட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் அனைத்தும், கர்நாடகாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எஸ்.பி.,களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.ஸ்லீப்பர் செல்களை அடையாளம் காணும்படியும், அவர்களை கண்காணிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு குறித்து, முதல்வருடன் விவாதிக்க உள்ளேன்.அமைச்சரவை கூட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.நீர்த்தேக்கங்கள், அணைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் கூடும் முக்கியமான இடங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் கூடுதல் எச்சரிக்கையுடன் பணியாற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ