உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 2028ல் எங்கள் கட்சி ஆட்சி: எத்னால்

2028ல் எங்கள் கட்சி ஆட்சி: எத்னால்

ஹாவேரி: பா.ஜ.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், தனிக்கட்சி துவக்குவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். 2028ல் ஆட்சியை பிடிப்பதாகவும் சவால் விடுத்துள்ளார்.கிராந்தி வீரா யுவ பிரிகேட் சார்பில் நேற்று ஹாவேரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பசனகவுடா பாட்டீல் எத்னால் பேசியதாவது:பணம் பெற்றுக் கொண்டு, ஓட்டுப் போடுவதை, மக்கள் நிறுத்த வேண்டும். ஹிந்துக்களுக்கு ஆதரவாக போராடும் நபருக்கு, ஜாதி, மதம் பேதம் இன்றி ஓட்டுப் போட வேண்டும்.அது போன்று ஓட்டுப் போட்டால், 2028ல் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் குணம் கொண்ட நபரே, கர்நாடகாவின் அடுத்த முதல்வர்.காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியர் மீது தாக்குதல் நடத்தியது சரியல்ல. ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்தும் அவசியமே இருக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கையால் காஷ்மீரில் அமைதி நிலவியது.தற்போது பாகிஸ்தானுக்கு நடுக்கம் துவங்கியுள்ளது. இதன் வெளிப்பாடே காஷ்மீரில் நடந்த பயங்கரவாத நிகழ்வு.என்னை பா.ஜ.,வில் இருந்து நீக்கிய பின், மக்களிடம் எனக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஷிவமொக்காவில் கலவரம், கே.ஜி.ஹள்ளி, டி.ஜெ.ஹள்ளி கலவரம், ஹூப்பள்ளி கலவரம் நடந்தபோது, எடியூரப்பாவே முதல்வராக இருந்தார். அப்போது எதையும் செய்யாதவர், இனி என்ன செய்ய போகிறார்?இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ