உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதல்வர் மாற்றம் தொடர்பான குழப்பம் மேலிடம் தீர்க்க பரமேஸ்வர் விருப்பம்

முதல்வர் மாற்றம் தொடர்பான குழப்பம் மேலிடம் தீர்க்க பரமேஸ்வர் விருப்பம்

பெங்களூரு : ''முதல்வர் மாற்றம் தொடர்பான குழப்பத்தை, காங்கிரஸ் மேலிடம் தீர்க்க வேண்டும்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பாக உள்ள குழப்பம் தீர்க்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறிய கருத்தில் நானும் உடன்படுகிறேன். ஊடகங்களில் ஒவ்வொரு நாளும், முதல்வர் மாற்றம் குறித்து ஒவ்வொரு தகவல் வெளியாகிறது. இதனால் காங்கிரஸ் மேலிடம் உடனடியாக தலையிட்டு குழப்பத்தை தீர்க்க வேண்டும். பீஹார் தேர்தலுக்கு பின், கர்நாடக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. பா.ஜ.,வினர் காணும் பகல் கனவு பலிக்காது. கர்நாடகாவின் வடமாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். பெங்களூரிலும் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் நிறைய உள்ளன. இவற்றை தீர்க்கவும் கவனம் செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்குள் வக்கீல் உடை அணிந்து வந்த ஒருவர், தலைமை நீதிபதி கவாயை நோக்கி செருப்பை வீச முயன்று உள்ளார். இது கண்டிக்கத்தக்கது. தலைமை நீதிபதி தலித் சமூகத்தை சேர்ந்தவர். உயர்ந்த பதவியில் அவர் இருப்பதே பெரிய சாதனை. இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை