உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிரானைட் விழுந்து மகன் பலி கண்களை தானம் செய்த பெற்றோர்

 கிரானைட் விழுந்து மகன் பலி கண்களை தானம் செய்த பெற்றோர்

சித்ரதுர்கா: சித்ரதுர்கா புறநகரில் ஹொலள்கெரே சாலையில் மார்பிள்ஸ் கிடங்கு உள்ளது. இது, சித்ரதுர்கா நகர மேம்பாட்டு ஆணைய முன்னாள் தலைவர் திப்பேசாமிக்கு சொந்தமானதாகும். நேற்று மதியம் லாரியில் புதிதாக வந்திறங்கிய கிரானைட் கற்களை, பணியாட்கள் கிடங்கிற்குள் எடுத்துச் சென்று, அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை திப்பேசாமியின் மகன் ராணா பிரதாப் சிம்ஹா, 30, கிட்டங்கிக்குள் சுவற்றின் அருகில் நின்று, கவனித்து கொண்டிருந்தார். கிரானைட்களை இடம் மாற்றும் போது, கை தவறி அதிக எடையுள்ள கிரானைட் துண்டு, சுவர் அருகில் நின்றிருந்த ராணா பிரதாப் சிம்ஹாவின் கழுத்தில் விழுந்தது. இதில் கழுத்து நசுங்கி அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மகனின் எதிர்பாராத இறப்பால், மனம் நொந்துள்ள திப்பேசாமியின் குடும்பத்தினர், மகனின் கண்களை தானம் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக, சித்ரதுர்கா ஊரக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை