உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்., மெட்ரோ ரயில் 175 கி.மீ., விஸ்தரிப்பு

 பெங்., மெட்ரோ ரயில் 175 கி.மீ., விஸ்தரிப்பு

பெங்களூரு: ''பெங்களூரில் 2027ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் சேவை 175 கி.மீ., துாரத்துக்கு விரிவுபடுத்தப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் அறிவித்தார். இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி: பெங்களூரில் 96 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 80 கி.மீ., துாரம் கூடுதலாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும். பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை, 2027 டிசம்பருக்குள் 175 கி.மீ., துாரம் விரிவுபடுத்தப்படும். பி.எம்.ஆர்.சி.எல்., நிறுவனம் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை கோர உள்ளது. மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் தினமும் ஒரு லட்சம் பயணியர் பயணிக்கின்றனர். இதன் மூலம் எலக்ட்ரானிக் சிட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி