உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்., திட்டமிடல் அதிகாரம் ஜி.பி.ஏ.,விடம் ஒப்படைப்பு?

பெங்., திட்டமிடல் அதிகாரம் ஜி.பி.ஏ.,விடம் ஒப்படைப்பு?

பெங்களூரு, செப். 10-பெங்களூரு நகரின் மேம்பாடு குறித்து திட்டமிடும் அதிகாரத்தை, பி.டி.ஏ.,விடம் இருந்து பறித்து, ஜி.பி.ஏ.,விடம் ஒப்படைக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு நகரின் மேம்பாடு குறித்து திட்டமிடும் பணிகளை, பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நகரின் 1,200 சதுர கி.மீ., பகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை, பி.டி.ஏ., வகிக்கிறது. இந்நிலையில், புதிதாக உதயமாகி உள்ள ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திடம், நகரின் மேம்பாடு குறித்து திட்டமிடும் அதிகாரத்தை ஒப்படைக்க, அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நகர்ப்புற மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத் கூறுகையில், ''கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு திட்டமிடும் அதிகாரத்தை வழங்குவது தொடர்பாக, சட்டத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. பெங்களூரு நகரில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான, மாஸ்டர் பிளானை தயாரிக்கும் பொறுப்பு, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உள்ளது,'' என்றார். பி.டி.ஏ., செல்வாக்குமிக்க ஆணையம் என்பதால், இதற்கு முந்தைய அரசுகள், பி.டி.ஏ., அதிகாரத்தை குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை