கோடை வெப்பம் தாங்காமல் வளர்ப்பு நாய்கள் உயிரிழப்பு
மைசூரு: வெப்பத்தின் தாக்கத்தால் இரண்டு நாய்கள் பலியாகின. மைசூரின் விஜயநகரின் மூன்றாவது ஸ்டேஜில் வசிப்பவர் தேஜஸ். இவர் கோல்டன் ரிடைவர் இன நாய் வளர்த்தார். 7 வயதான இந்த நாய்க்கு ரோனி என பெயர் சூட்டியிருந்தார். ஏப்ரல் 25ம் தேதியன்று குவெம்பு நகரின் பாசுதேவ சோமானி கல்லுாரியில் நடந்த நாய்கள் கண்காட்சியில் ரோனி பங்கேற்றிருந்தது. கண்காட்சி முடிந்த பின், மதியம் 3:00 மணியளவில் வெயிலை தாங்க முடியாமல் சோர்வடைந்தது. உடனடியாக மைசூரின், விஜயநகரில் உள்ள வளர்ப்பு பிராணிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பலனின்றி ரோனி உயிரிழந்தது. மைசூரில் வசிக்கும் மோகன் என்பவர், சோனு என்ற நாயை வளர்த்து வந்தார். இதை ஏப்ரல் 25ம் தேதி மதியம், வாக்கிங் அழைத்து சென்றனர். அப்போது வெப்பத்தை தாங்க முடியாமல் மயங்கியது. மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி சோனு இறந்தது. இதே பகுதியில் வசிக்கும், மற்றொரு வளர்ப்பு நாயும், வெயிலால் பாதிக்கப்பட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.