உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நீதிமன்றங்களுக்கு குண்டு மிரட்டல் போலீசார் சோதனை

 நீதிமன்றங்களுக்கு குண்டு மிரட்டல் போலீசார் சோதனை

ஹாவேரி: குடகு, தார்வாட் பற்றும் குடகு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. குடகு, ஹாவேரி, தார்வாட் மாவட்டங்களுக்கு, நேற்று காலை, இ - மெயில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், 'நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். அது மதியம் 2:00 மணிக்கு வெடிக்கும்' என, கூறப்பட்டிருந்தது. இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளின் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், நீதிமன்றங்களின் வக்கீல்கள், ஊழியர்கள், வழக்கு தொடர்பாக வந்திருந்த பொதுமக்களை வெளியேற்றினர். நீதிமன்ற கட்டடம், பார்க்கிங் இடம், என அனைத்து இடங்களில் சோதனை நடத்தினர். வெடி பொருட்கள் ஏதும் இருக்கவில்லை. இது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்ததால், அனைவரும் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை