உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசு மருத்துவமனையில் கைதி தற்கொலை

 அரசு மருத்துவமனையில் கைதி தற்கொலை

ராய்ச்சூர்: தண்டனை கைதி ஒருவர், அரசு மருத்துவமனையில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹூப்பள்ளியை சேர்ந்தவர் பவன்குமார், 32. ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகாவில் நடந்த கொலை வழக்கில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். காசநோய், உணவு குழாயில் ரத்த கசிவால் அவர் அவதிப்பட்டு வந்தார். நிலைமை மோசமானதால், 22ம் தேதி ராய்ச்சூர் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலையில், கைதிகள் வார்டு கழிப்பறைக்கு சென்றவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகம் அடைந்த போலீசார், கதவை உடைத்தபோது, ஜன்னல் கம்பியில் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மார்க்கெட் யார்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !