மேலும் செய்திகள்
தத்த ஜெயந்தி விழா: டி.ஜி.பி., சலீம் ஆய்வு
7 minutes ago
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
9 minutes ago
ஹம்பி ரயிலை கவிழ்க்க சதியா?
10 minutes ago
போலீசார் அவமதித்ததாக கூறி தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர்
12 minutes ago
பரப்பன அக்ரஹாரா: பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வீடியோ வெளியான நிலையில், பிரபல ரவுடிகள் வில்சன் கார்டன் நாகா, குப்பாச்சி சீனாவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர்களிடம், போலீசார் விசாரிக்க உள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள, பயங்கரவாதி ஷகீல் மன்னா, பலாத்கார வழக்கு குற்றவாளி உமேஷ் ஷெட்டி உள்ளிட்ட கைதிகள், மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ கடந்த 7ம் தேதி வெளியானது. சிறைக்குள் மதுவிருந்தி நடத்தி, கைதிகள் ஆட்டம் போட்ட வீடியோவும், கடந்த 8ம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா தலைமையிலான குழு விசாரிக்கிறது. நடிகர் தர்ஷன் ஆதரவாளரான நடிகர் தன்வீர் கவுடா, வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி, அவரிடம் மூன்று முறை விசாரிக்கப்பட்டது. வக்கீல் ஒருவரிடம் இருந்து வந்த வீடியோவை, தர்ஷன் மனைவி விஜயலட்சுமிக்கு அனுப்பியதாக, போலீஸ் முன்பு தன்வீர் கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் சிறையில் நடந்த மதுபான விருந்தில் கலந்து கொண்ட, ரவுடியான மஞ்சுநாத் என்ற குதிரே மஞ்சா தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, கைதிகள் சொகுசு வாழ்க்கை வீடியோவை, பெலகாவி ஹிண்டல்கா சிறையில் இருக்கும், பிரபல ரவுடிகள் வில்சன் கார்டன் நாகா, குப்பாச்சி சீனாவுக்கு அனுப்பியதாக கூறினார். நாகாவும், சீனாவும் முன்பு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தனர். சிறையில் இருக்கும் தர்ஷனுக்கு சொகுசு வசதி செய்து கொடுத்ததால், ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரிடமும், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விசாரிக்க, போலீசார் தயாராகி வருகின்றனர்.
7 minutes ago
9 minutes ago
10 minutes ago
12 minutes ago