உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஹூப்பள்ளி சிறையில் கஞ்சா பயன்படுத்தும் கைதிகள்

 ஹூப்பள்ளி சிறையில் கஞ்சா பயன்படுத்தும் கைதிகள்

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி துணைச்சிறையில், கைதிகள் கஞ்சா பயன்படுத்துகின்றனர். கைதிகளை பார்க்க வரும் நபர்கள், கஞ்சாவை கொண்டு வந்து கொடுக்கின்றனர். இதற்கு சிறை ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார், நான்கு நாட்களுக்கு முன், ஹூப்பள்ளி துணைச்சிறை, தார்வாட் மத்திய சிறைக்கு சென்று ஆய்வு நடத்தினார். சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதாக, உறுதி அளித்தார். ஆனால், சிறையில் கஞ்சா பயன்படுத்துவது நிற்கவில்லை. சிறையில் சில கைதிகள் கஞ்சா பயன்படுத்துவது, மதுபானம் அருந்தும் வீடியோக்கள், போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதை கவனித்த உயர் அதிகாரிகள், விசாரணைக்கு உத்தரவிட்டனர். தார்வாட் மத்திய சிறை கண்காணிப்பாளர் மஹதேவா நாயக் தலைமையில் துவங்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள், ஹூப்பள்ளி சிறைக்கு வந்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை