உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தனியார் பஸ் கட்டணம் 20 சதவீதம் உயர்ந்தது

 தனியார் பஸ் கட்டணம் 20 சதவீதம் உயர்ந்தது

பெங்களூரு: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் நடராஜ் சர்மா கூறியதாவது: டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பராமரிப்பு செலவுகள், ஓட்டுநர்கள், ஊழியர்களின் சம்பளம், வாகன பராமரிப்பு உட்பட பல செலவுகள் அதிகரித்து உள்ளன. நாங்கள் ஒவ்வொரு நாளும், ஒரு பஸ்சுக்கு குறைந்தபட்சம் 150 லிட்டர் டீசலை பயன்படுத்துகிறோம். எரிபொருள் விலை 3 ரூபாய் உயர்த்துள்ளதால், கூடுதலாக, 450 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே, பஸ் பயண கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. இந்த கட்டண உயர்வு, பயணியர் மீது, குறிப்பாக நீண்ட துாரம் பயணிப்போருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். தற்போதைய பொருளாதார சூழலில், சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு இந்த நடவடிக்கை அவசியம். இவ்வாறு அவர் கூறினார். தனியார் பஸ் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தி உள்ளதால், பெங்களூரு - மங்களூரு இடையே, 1,000 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம், 1,200 ரூபாய்; பெங்களூரு - பாகல்கோட் இடையேயான பஸ் கட்டணம் , 800 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய்; பெங்களூரு - கலபுரகி இடையே, 1,200 ரூபாயில் இருந்து, 1,400 ரூபாயாகவும் கட்டணம் உயர்ந் துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை