வெப்பமயமாதல் கட்டுரைக்கு பரிசு
கோலார்: மன்வந்தரா பதிப்பக திறன் மேம்பாட்டு பயிற்சி நிறு வனம், மாவட்ட பத்திரிகையாளர் சங்கம், கோலார் சிந்தனையாளர்கள் அமைப்பு, ஆகியவை இணைந்து 'உலக வெப்பமயமாதலுக்கு யார் பொறுப்பு? அதை கட்டுப்படுத்த ஊடகங்கள், பொதுமக்கள், சங்க அமைப்புகளின் பொறுப்பு என்ன?' என்ற தலைப்பில் கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் கூட்டரங்கில், கட்டுரை போட்டி நடத்தியது. இதில், 'ஸ்ரீனிவாசப்பூர் சக்தி' பத்திரிகையின் ஆசிரியரான உபேந்திராவின் சிறந்த கட்டுரைக்கு, கலெக்டர் எம்.ஆர்.ரவி பரிசு வழங்கினார். கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.