உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காய்ந்த மரங்களை அகற்றுவதில் சிக்கல்

காய்ந்த மரங்களை அகற்றுவதில் சிக்கல்

பெங்களூரு: ஜி.பி.ஏ., வனப்பிரிவில் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் பணிபுரிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் காய்ந்த நிலையில் உள்ள மரங்கள், அடிக்கடி வீசும் காற்று, பெய்யும் மழையின்போது வேரோடு சாய்வது, அவற்றின் கிளைகள் முறிந்து விழுவது வழக்கமாக உள்ளது. இதனால், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இருப்பினும், காய்ந்த நிலையில் உள்ள மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இந்த விஷயத்தில் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் வனப்பிரிவு அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஜி.பி.ஏ., வனப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரில் நடப்பாண்டில் மட்டும் 1,122 மரங்கள்; 3,547 கிளைகள் விழுந்துள்ளன. பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே மரங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மரங்கள் விழுவதற்கு முன்பே வெட்டப்பட்டால் அசம்பாவிதம் தடுக்கப்படும். கடந்த ஆண்டுகளில் வனப்பிரிவில் 50 ஊழியர்கள் பணியில் இருந்தனர். ஆனால், தற்போது 18 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் பணிகளை செய்வதில் தோய்வு ஏற்பட்டுள்ளது. வனப்பிரிவு ஊழியர்கள் பகுதி நேர அடிப்படையில் பணிபுரிகின்றனர். காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அடையாளம் கண்டு, அகற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு வார்டு பொறியாளர்களிடமே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி