உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சொத்து வரி பாக்கி; கமிஷனர் எச்சரிக்கை

 சொத்து வரி பாக்கி; கமிஷனர் எச்சரிக்கை

பெங்களூரு: 'சொத்து வரி கட்டாத சொத்துகள் ஏலம் விடப்படும்' என கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு உட்பட்ட பகுதியில் 7,020 பேர் சொத்து வரி செல்லுதாமல் உள்ளனர். இவர்களிடமிருந்து, 437 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. சொத்து வரி கட்டுவதற்கு வரும் 17ம் தேதியே இறுதி நாள். இதற்குள், வரி செலுத்தவில்லை என்றால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்படும். இதை தவிர்க்க வேண்டுமென்றால் உடனடியாக சொத்து வரி கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ