உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நெலமங்களா விமான நிலையம் எதிராக போராட்டம்

நெலமங்களா விமான நிலையம் எதிராக போராட்டம்

நெலமங்களா : இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு நெலமங்களா தேர்வு செய்யப்பட்டால், அதை எதிர்த்து போராட்டம் நடத்த அங்குள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.மாநிலத்தில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க கனகபுராவில் இரண்டு இடங்கள், பெங்களூரு ரூரல் நெலமங்களா ஆகிய இடங்கள் மாநில அரசு தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டன.இந்நிலையில், நேற்று நெலமங்களா, பொம்மனஹள்ளி கிராம விவசாயிகள், கிராம மக்கள் ஆலோசனை நடத்தினர்.விமான நிலையம் அமைக்கும்போது வீடுகள், மடங்கள், சொத்துகள், கோவில்கள், தோட்டங்கள் என பலவற்றை இழக்க நேரிடும். இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை