உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  திடக்கழிவு சுத்திகரிப்பு ஆலை முன் போராட்டம்

 திடக்கழிவு சுத்திகரிப்பு ஆலை முன் போராட்டம்

ஆனேக்கல்: பெங்களூரு மாநகராட்சியின் திடக்கழிவு சுத்திகரிப்பு ஆலையால், சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறி, அப்பகுதியினர் ஆலை முன் நேற்று போராட்டம் நடத்தினர். பெங்களூரு ஆனேக்கல்லின் சிக்கனமங்களாவில், பெங்களூரு மாநகராட்சியின் திடக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலை முன், தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ராஜேஷ் ரெட்டி தலைமையில் கடந்த, 17 ல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், அப்பகுதி மக்கள் பங்கேற்றனர். ராஜேஷ் ரெட்டி கூறியதாவது: இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், இப்பகுதி மக்கள் உடல்நல பிரச்னையாலும் பாதிக்கப்படுகின்றனர். ஆலையில் இருந்து வெளியேறும் மாசடைந்த நீர் மற்றும் காற்றினால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். திடக்கழிவு சுத்திகரிப்பு ஆலையால், கிராமத்தில் சுத்தமான குடிநீர் இல்லை. எனவே, தொட்டநாகமங்களா கிராமத்திற்கு காவிரி நீரை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு தொல்லையும் அதிகரித்து உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலை தொடர்பாக அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை