உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சரியில்லாத சாலை 29ல் போராட்டம்

 சரியில்லாத சாலை 29ல் போராட்டம்

ஆனேக்கல்: சாலை மோசமாக இருப்பதை கண்டித்து, ஆனேக்கல் குடியிருப்பாளர்கள் நல சங்கத்தினர் வரும் 29ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். பெங்களூரு ஆனேக்கல் தாலுகாவில் உள்ள முத்தநல்லுார், ஹெப்பகோடி, சிங்கன அக்ரஹாரா, சம்பிகே, ஆனந்த் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிக மோசமாக உள்ளன. இங்கு, முறையான மழை நீர் வடிகால் வசதிகளும் இல்லை. இதனால், மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க பல ஆண்டுகளாக அப்பகுதியினர் கோரிக்கை வைத்து உள்ளனர். இருப்பினும், இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.இதனால், ஆத்திரம் அடைந்த ஆனேக்கல் குடியிருப்பாளர்கள் நல சங்கத்தினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். வரும் 29ம் தேதி ஏ.எஸ்.பி., கல்லுாரி மைதா னத்தில் போராட்டம் நடத்த உள்ளனர். 'இதில், 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்' எ னவும் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை