உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.20,000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணி அதிகாரி கைது

ரூ.20,000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணி அதிகாரி கைது

ராம்நகர்: ஒப்பந்ததாரரரிடம் 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பொதுப்பணி துறை அதிகாரியை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.ராம்நகர் மாவட்டம், கனகபுராவின் சோமதப்பனஹள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுப்பணித் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் முனிராஜு.இந்த கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு பணியை முடித்த கான்ட்ராக்டர் வெங்கடாசலய்யா, பில் தொகை வாங்க, முனிராஜுவை சந்தித்தார். பில் தொகையை விடுவிக்க, அவர் 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.தருவதாக கூறிவிட்டு வந்த வெங்கடாசலய்யா, ராம்நகர் லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி, நேற்று காலை அதிகாரி மஞ்சுநாத்தை, கான்ட்ராக்டர் சந்தித்து பணம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லோக் ஆயுக்தா போலீசார், அதிகாரி மஞ்சுநாத்தை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை