உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பி.இ.எல்., சுரங்கப்பாதையில்  மீண்டும் பஞ்சர் மாபியாக்கள்

 பி.இ.எல்., சுரங்கப்பாதையில்  மீண்டும் பஞ்சர் மாபியாக்கள்

பெங்களூரு: பி.இ.எல்., சுரங்கப்பாதையில், மீண்டும் பஞ்சர் மாபியாக்களின் ஆட்டம் துவங்கியுள்ளது. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். பெங்களூரு பி.இ.எல்., சுரங்கப்பாதை பகுதியில், ஆணிகள் கொட்டி கிடக்கின்றன. சுரங்கப்பாதை முழுதும் ஆணியாக காட்சி அளிக்கிறது. இந்த ஆணிகளால் அவ்வழியாக செல்லும் பைக்குகள் பஞ்சர் ஆகின்றன. பஞ்சர் செய்யப்பட்ட வாகனங்களை அருகிலுள்ள பஞ்சர் ஒட்டும் கடைகளுக்கு கொண்டு சென்றால், அவர்களோ வழக்கத்தை விட அதிகமாக பணம் வசூலிக்கின்றனர். இதன் மூலம் மீண்டும் பஞ்சர் மாபியாக்கள் தங்கள் வேலையை காட்ட தொடங்கிவிட்டது தெரிகிறது. இது குறித்து, வாகன உரிமையாளர்கள் கூறியதாவது: யாரோ சிலர் வேண்டுமென்றே ஆணியை கொட்டி விட்டு செல்கின்றனர். பஞ்சர் ஒட்டி பணம் சம்பாதிக்கும் வேலையை செய்து வருகின்றனர். இதுகுறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி