உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ராகுலுக்கு ராகுகாலம் துவங்கியாச்சு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல்

 ராகுலுக்கு ராகுகாலம் துவங்கியாச்சு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல்

பெங்களூரு: ''ராகுலுக்கு ராகு காலம் துவங்கியுள்ளது. இனி முதல்வர் சித்தராமையா கூறியபடியே கேட்க வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: பீஹார் தேர்தல் முடிவால், காங்கிரஸ் மேலிடம் மந்தமாகியுள்ளது. ஆனால் மற்றொரு பக்கம், முதல்வர் சித்தராமையா வலுவடைந்துள்ளார். இதுவரை ராகுலின் பேச்சை, சித்தராமையா கேட்டார். இனி இவரது பேச்சை ராகுல் கேட்க வேண்டும். ராகுலுக்கு ராகு காலம் துவங்கியுள்ளது. இவரை சித்தராமையா பாம்பாட்டி போன்று ஆட வைப்பார். பீஹார் தேர்தல் முடிவு, காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சித்தராமையாவுக்கு சுக்ர திசை துவங்கியுள்ளது. சிவகுமார் நினைத்த மாற்றங்கள் நடக்காது. ஓட்டுத் திருட்டு காங்கிரசாரின், பிராண்டாக இருந்தது. இவர்களின் வசனங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். கர்நாடகாவில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே, காங்கிரஸ் அரசு இருக்கும். அதுவரை என்ன செய்கின்றரோ, செய்யட்டும். ஓட்டுத் திருட்டு குற்றஞ்சாட்டியதற்கு, மக்களிடம் காங்கிரசார் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ