உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தேர்தல் அரசியலில் ஓய்வு ராஜண்ணா அறிவிப்பு 

தேர்தல் அரசியலில் ஓய்வு ராஜண்ணா அறிவிப்பு 

மைசூரு: தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக, கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா அறிவித்து உள்ளார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:எனக்கு 75 வயது ஆகிவிட்டது. தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். ஆனால், கூட்டுறவு அரசியலில் தீவிர கவனம் செலுத்துவேன். அதிகாரத்தில் உள்ளவர்கள் பிடியில் இருந்து கூட்டுறவு துறையை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன். நமது மாநிலத்தின் கூட்டுறவு துறை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. சில தொழில்நுட்ப காரணங்களால் கூட்டுறவு சங்கங்களுக்கு நடக்க வேண்டிய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வேறு எந்த காரணமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.துமகூரு மாவட்ட அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் ராஜண்ணா, தன்னை ஹனி டிராப் செய்ய முயற்சி நடந்தது பற்றி, சட்டசபையில் உண்மையை உடைத்தார். அவர் மீது காங்கிரஸ் மேலிடம் அதிருப்தியில் உள்ளது. அடுத்த தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்காது என்று தெரிந்ததால், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு முடிவை, அறிவித்து உள்ளார் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ