உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பயோமெட்ரிக்கில் விலக்களிக்க கோரிக்கை

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பயோமெட்ரிக்கில் விலக்களிக்க கோரிக்கை

பெங்களூரு : 'மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெற, பயோமெட்ரிக் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,' என, கர்நாடக மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, உணவுத்துறை பொது செயலருக்கு, நாகலட்சுமி சவுத்ரி எழுதிய கடிதம்: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தோலில் சுருக்கம் உள்ளது. விரல் ரேகைகள் சரியாக பதிவாகாது. இவர்கள் பயோமெட்ரிக் பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் பெறுவது கஷ்டமாக உள்ளது. எனவே இவர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு செய்வதில் இருந்து விலக்களிக்க வேண்டும். நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடிவது இல்லை. அவர்களுக்கு நியாய விலை கடைகளில் ஆதார் கார்டு அல்லது ரேஷன்கார்டு அடிப்படையில், ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடாவுக்கு கடிதம் எழுதிய மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி பாய், 'பெண்களின் பெயரில் பதிவு செய்யும் சொத்துகளுக்கு, பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும்' என கோரியுள்ளார். அதே போன்று, அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னிஷ், தொழிலாளர் நலத்துறை கமிஷனர், கித்வாய் புற்று நோய் மருத்துவமனை நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிய, மகளிர் ஆணைய தலைவி, 'கித்வாய் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண்களுக்கு, ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ