உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செப்டம்பரில் புரட்சி ராஜண்ணா உறுதி

செப்டம்பரில் புரட்சி ராஜண்ணா உறுதி

பெலகாவி: ''வரும் செப்டம்பரில், கர்நாடகாவில் அரசியல் புரட்சி நடக்கும்,'' என, மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா மீண்டும் தெரிவித்தார். பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் நடப்பாண்டு செப்டம்பரில், அரசியல் புரட்சி நடக்கும் என, கூறியிருந்தேன். இப்போதும் அதையே கூறுகிறேன். அதில் மாற்றம் ஏதும் இல்லை. என் பேச்சில் இருந்து, பின் வாங்கமாட்டேன். இதற்காக எனக்கு புரட்சியாளன் என்ற விருது தேவையில்லை. மற்ற தலைவர்கள், இத்தகைய விஷயங்களை பற்றி, பகிரங்கமாக பேசமாட்டார்கள். மனதுக்குள் மறைத்து வைப்பர். ஆனால் என்னால் அப்படி இருக்க முடிவதில்லை. ஊடகத்தினரை கண்டவுடன், அனைத்து விஷயங்களையும் கூற வேண்டும் என்ற துடிதுடிப்பு ஏற்படும். பகிரங்கமாக கூறிவிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை