உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடுரோட்டில் ரவுடி கொலை

நடுரோட்டில் ரவுடி கொலை

மங்களூரு: மங்களூரு டவுன் கிண்ணிகம்பாலாவில் வசித்தவர் சுகாஸ் ஷெட்டி, 37. ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022 ம் ஆண்டு கட்டிபல்லாவின் முகமது பாசில் என்பவரை, நடுரோட்டில் வைத்து கொலை செய்த வழக்கில் சுகாஸுக்கு தொடர்பு உள்ளது.இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணிக்கு கிண்ணிகம்பாலா பகுதியில் உள்ள கடை முன்பு சுகாஸ் நின்றார். அப்போது அங்கு வந்த ஆறு பேர், சுகாஸை பிடித்து இழுத்தனர். ரோட்டில் தள்ளி வாளால் சரமாரியாக வெட்டினர். பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் இறந்தார். முகமது பாசில் கொலைக்கு பழிக்கு, பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை