உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹாசனாம்பா கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை வசூல்

ஹாசனாம்பா கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை வசூல்

ஹாசன்: ''வார இறுதி என்பதால், நேற்று ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்தனர். ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது,'' என, மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்தார். இது குறித்து, ஹாசனில் நேற்று அளித்த பேட்டி: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, ஹாசனாம்பா கோவில் திறக்கப்படுகிறது. தற்போது கோவில் திறக்கப்பட்டுள்ளது. பெருமளவில் பக்தர்கள் வருவதால், காணிக்கையும் அதிகரிக்கிறது. வார இறுதி நாள் என்பதால், நேற்று அதிகமான பக்தர்கள் வந்தனர். ஒரே நாளில், ஒரு கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது. 1,000 ரூபாய் டிக்கெட் விற்பனையால் 65 லட்சம் ரூபாய்; 300 ரூபாய் டிக்கெட் விற்பனையால் 35 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலானது. வருவாயில் ஹாசனாம்பா கோவில் சாதனை செய்கிறது. நேற்று முன் தினம் 67 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலானது. கடந்தாண்டு 12 கோடி ரூபாய் வசூலானது. நடப்பாண்டு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இதுவரை 91,000 பேர் பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்துள்ளனர். முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் 15ம் தேதி, ஹாசனுக்கு வந்து ஹாசனாம்பாவை தரிசனம் செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ