உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இரண்டாம் கட்ட நகரங்கள் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

 இரண்டாம் கட்ட நகரங்கள் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: கர்நாடகாவில் இரண்டாம் கட்ட நகரங்களின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநில தகவல் தொழில்நுட்ப துறை செயலர் மஞ்சுளா கூறியதாவது: கர்நாடகாவில் உள்ள இரண்டாம் கட்ட நகரங்களில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைவதற்கு மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய மாநிலமாக கர்நாடகாவை ஆக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மைசூரு, ஹூப்பள்ளி போன்ற நகரங்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்படும். ஸ்டார்ட் அப்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். இது, மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி