அனுமதியின்றி காங்., பேனர்கள் ரூ.12 லட்சம் அபராதம் வசூல்
பெங்களூரு: மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழாவுக்காக, பெங்களூரு மாநகராட்சி அனுமதியின்றி, பிளக்ஸ் பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தலைவர் பதவியில் இருந்து விலகும் முகமது ஹாரிஸ் நலபாட், துணை முதல்வரும், மாநில தலைவருமான சிவகுமார் முன்னிலையில், மஞ்சுநாத் கவுடாவிடம் கட்சிக்கொடியை வழங்கினார்.இவ்விழாவுக்காக, அரண்மனை மைதானத்தை சுற்றிலும் மற்றும் நகரின் பல இடங்களில் 1,350 பிளக்ஸ், பேனர்கள், 600 கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. விழாவுக்கு வரும்போது, பிளக்ஸ், பேனர்கள், கொடிகளை துணை முதல்வர் சிவகுமார் பார்த்தார்.மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்தை தொடர்பு கொண்ட அவர், மாநகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றி, சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து, அனுமதியின்றி வைத்ததாக 12 வழக்குகள் பதிவு செய்த மாநகராட்சி, 12 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தது.