ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா அணிவகுப்பு
தங்கவயல்: தங்கவயலில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் நேற்று அணிவகுப்பு நடத்தினர். இதில் சீருடை அணிந்து பலரும் கம்பீரமாக பங்கேற்றனர். ராபர்ட்சன்பேட்டை நகராட்சி விளையாட்டு திடலில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தினர் தேச பக்தியை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து அணி வகுப்பு துவங்கியது. வெள்ளை சட்டை, காக்கி பேன்ட், கையில் தடியுடன் கொட்டும் மழையிலும் நனைந்தபடி கம்பீரமாக பங்கேற்றனர். வீட்டு வாசலில் கோலமிட்டும், மலர் துாவியும் பொதுமக்கள் வரவேற்றனர். நகராட்சி விளையாட்டு திடலில் துவங்கிய அணிவகுப்பு, ராபர்ட்சன்பேட்டை சுராஜ் மல் சதுக்கம், காந்தி சதுக்கம், வெங்கடேச பெருமாள் கோவில், சொர்ணா நகர், அய்யப்பா நகர், ஆயில் மில் சாலை, முதல் கிராஸ் வழியாக, நகராட்சி விளையாட்டு திடலை வந்தடைந்தது. தங்கவயல் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் தத்தாத்ரேயா ராமசந்திரா, பிரவீன், கோலார் மாவட்ட தலைவர் ஜெகதீஷ், சூரி, தங்கவயல் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கணேஷ், ஸ்ரீதர்ராவ் சிந்தியா, தங்கவயல் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஒய்.சம்பங்கி, மாவட்ட துணைத் தலைவர் கமல் நாதன், சுரேஷ் நாராயணா குட்டி, காந்தி, பாண்டியன், சுரேஷ் குமார், ரவிகுமார் உட்பட பலரும் சீருடையில் பங்கேற்றனர்.