மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனைகளில் சூரிய மின்சாரம் உற்பத்தி
1 minutes ago
இன்று இனிதாக...
2 minutes ago
4 வது மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி
2 minutes ago
கல்லுாரி மாணவர் மர்ம மரணம்
4 minutes ago
மாலுார்: 'தீண்டாமையை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை ஹிந்து சமூகம் உணர வேண்டும். நமது வீடுகள், கிராமங்கள், கோவில்களில் சுதந்திரமான அணுகுமுறை இருக்க வேண்டும். ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்,' என, கோலார் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் திப்பேசாமி கூறினார். மாலுாரின் அரசு கல்லுாரி அருகே உள்ள ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த, 'ஹிந்து சமாஜ் உத்ஸவம்' என்ற ஹிந்து மாநாட்டில் அவர் பேசியதாவது: கடந்த காலங்களில் மதங்களில், இந்தியா உலக குருவாக இருந்தது. பிரபஞ்சத்தில் உலகம் தொடங்கிய போது, ஹிந்து சமூகம் அதன் உச்சத்தில் இருந்தது. இந்தியா உலகிற்கு உத்வேகம், வீரம், ஒரு சிறந்த நாகரீகத்தை அளித்துள்ளது. ஹிந்து மதத்தை பொறுத்தவரை ரத்த ஓட்டம் இருக்கும் போது தான், ஒருவர் அடிமைத்தனத்திலிருந்து எழுந்து வெளியே வர முடியும். குறுகிய மனப்பான்மை முன்னர் ஹிந்துவாக இருப்பதில் குறுகிய மனப்பான்மை நிலவியது. இன்று அந்த சூழ்நிலை இல்லை. தைரியமாக ஹிந்துவாக இருக்கக்கூடிய சூழல் உள்ளது. தீண்டாமையை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை ஹிந்து சமூகம் உணர வேண்டும். நமது வீடுகள், கிராமங்கள், கோவில்களுக்குள், சுதந்திரமான அணுகுமுறை இருக்க வேண்டும் என்று கூற வேண்டும். ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது, ஹிந்து சமூகம் நன்கு ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாமியார், மருமகள் நாகலாபுரம் மடத்தின் தேஜஸ்லிங்க சிவாச்சாரியார் சுவாமிகள் பேசியதாவது: குருக்களையும், பெரியவர்களையும் மதிப்பது நமது கலாசாரம். ஆரம்பத்தில் இருந்தே, ஒருவருக்கொருவர் அன்பு, பாசத்துடன் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் மாமியார், மருமகள் கதைகளால் வீடுகள் சீரழிந்து வருகின்றன. இளைஞர் சமூகத்தை அடிமையாக்கி, தவறாக வழி நடத்துகின்றனர். ஹிந்து சமூகத்தையும், கலாசாரத்தையும் அழிக்க சதி நடக்கிறது. ஹிந்துக்கள் விழிப்புணர்வு பெற்று தங்கள் பாரம்பரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஹிந்து மதம் குறித்த ஆர்வம் வளர வேண்டும். வீடுகளிலும், கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாலுாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரின் பிரதான சாலையில் காவி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. பிரம்மானந்தா சுவாமிகள், ஹிந்து சமாஜ் உத்ஸவ குழு தலைவர் எஸ்.என்.ரகுநாத், கவுரவத் தலைவர் நாகராஜ், நாராயணப்பா, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு, முன்னாள் பா.ஜ., - எம்.பி., முனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் கவுடா, ஹூடி விஜயகுமார், ஆர்.பிரபாகர், ஹரிஷ் ராமேகவுடா உட்பட பலர் பங்கேற்றனர்
1 minutes ago
2 minutes ago
2 minutes ago
4 minutes ago