உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  டிஜிட்டல் வருகை பதிவால் கிராமப்புற ஆசிரியர்கள் அவதி

 டிஜிட்டல் வருகை பதிவால் கிராமப்புற ஆசிரியர்கள் அவதி

பெங்களூரு: அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் தாமதமாக வருவது, பணிக்கு வராமல் இருப்பதை தடுக்கும் நோக்கில், 'லொகேஷன ் ' மற்றும் முகம் அடையாளம் காட்டும் நடைமுறையை, கல்வித்துறை செயல்படுத்தியது. இது கிராமப்புற ஆசிரியர்களுக்கு, பெரும் தலைவலியாக உள்ளது. அனைத்து துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும். விடுமுறை எடுக்க கூடாது, பணிகள் தடையின்றி நடக்க வேண்டும் என்பதால், 'ஆன்லைன் டிஜிட்டல ் ' வருகை பதிவு நடைமுறையை, மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, 'காம்ஸ்' என்ற செயலியை வடிவமைத்துள்ளது. பள்ளிக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள்தாமதமாக வருவதை, பணிக்கு மட்டம் போடுவதை கண்ட கல்வித்துறை, லொகேஷன் மற்றும் முகம் அடையாளம் காட்டும் நடைமுறையை செயல்படுத்தியது. இந்த நடைமுறையால், மற்ற துறைகள் மற்றும் நகர்ப்புற ஆசிரியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு, பெரும் பிரச்னையாக உள்ளது. 'நெட் ஒர்க்' பிரச்னை, தொழில்நுட்ப காரணங்களால் அவதிப்படுகின்றனர். கிராமங்களில் நெட் ஒர்க் கிடைப்பதில்லை. ஒருமுறை வருகையை பதிவு செய்ய, எட்டு முதல் 10 முறை முயற்சிக்க வேண்டியுள்ளது. டிஜிட்டல் வருகை பதிவுக்காக, 'ரிஜிஸ்டர ் ' செய்யும் போது, எந்த வகை முகம் இருந்ததோ, அதே முகபாவத்தில் போட்டோ எடுக்க வேண்டும். முகத்தில் துாசு படிந்திருந்தால், கண்ணாடி அணிந்திருந்தால், லிப்ஸ்டிக், விபூதி இருந்தால், செயலி போட்டோ கேப்சர் செய்யாது. 'மிஸ் மேட்ச் பேஸ்' என, காட்டும். நல்ல வெளிச்சமான இடங்கள், துாசி இல்லாத இடங்களை தேடி ஆசிரியர்கள் மொபைல் போனை கையில் பிடித்தபடி அலைய வேண்டும். சர்வர் நிதானமாக இருப்பதால், வருகையை பதிவு செய்ய, ஆசிரியர்களுக்கு அதிக நேரம் ஆகிறது. ஒருவேளை முகம் சரியாக செயலியில் பொருந்தாவிட்டால், விடுமுறை என, செயலி காட்டும். நகர்ப்பகுதிகளில் நெட்ஒர்க் பிரச்னை இருக்காது. சர்வரும் நன்றாக இருக்கும். எனவே நகர்ப்பகுதிகளில் மட்டும் லொகேஷன், முகம் அடிப்படையிலான வருகை பதிவு நடைமுறையை நீட்டிக்கலாம். கிராமப்புற பள்ளிகளில், 'பேஸ் ரீடிங் பயோமெட்ரிக்' வருகை பதிவு முறையை கொண்டு வரும்படி, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி