உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தலித்களிடம் பிரிவினை ஏற்படுத்த முயற்சி காங்., மீது சலவாதி நாராயணசாமி கடுப்பு

தலித்களிடம் பிரிவினை ஏற்படுத்த முயற்சி காங்., மீது சலவாதி நாராயணசாமி கடுப்பு

சித்ரதுர்கா : ''தலித் மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் குளிர் காய காங்கிரஸ் முயற்சி செய்கிறது,'' என, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் எப்போதுமே தலித் மக்களுக்கு எதிரான கட்சி தான். தற்போது மாநிலத்தில் தலித் சமூகத்தில் 101 உட்பிரிவுகள் உள்ளன. இவற்றை 182 ஆக உயர்த்தி பிரிவினை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் லாபம் பெற அரசு முயற்சி செய்து வருகிறது.தலித் சமூகங்களை காங்கிரஸ் என்ற 'பேய்' விழுங்க பார்க்கிறது. ஓட்டு வங்கியை பாதுகாக்க தந்திரம் செய்கின்றனர். அம்பேத்கருக்கு அநீதி இழைத்தனர். காங்கிரசை தலித் மக்கள் நம்பவே வேண்டாம்.மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் மோசம் அடைந்துள்ளது. தவறு செய்வோருக்கு தண்டனை கிடைப்பது இல்லை. பா.ஜ., நடத்தும் மக்கள் ஆக்ரோஷ யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அறிக்கையின் அசல் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதுபற்றி விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்?மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று, அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் தெளிவுபடுத்தி உள்ளார். முஸ்லிம் கான்ட்ராக்டர்களுக்கு அரசு பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறையில் தலித் மக்கள் வீடுகள் குறி வைத்து தீ வைக்கப்படுகின்றன. அதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது இல்லை.அரசியலமைப்பு நகலை கையில் வைத்துக் கொண்டு, ராகுல் சுற்றுவது முட்டாள் தனமாக உள்ளது. அவருக்கு தேசிய தலைவராகும் தகுதி இல்லை. ஆயிரம் ஆண்டுக்கு முன்பு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது என்று கூறும் ராகுலை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.தெலுங்கானாவில் ஜாதி பாகுபாட்டால் தற்கொலை செய்த மாணவர் ரோகித் வெமுலா பெயரில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறும் ராகுல், கோலாரின் கம்பலபள்ளியில் தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்டது பற்றி ஏன் பேசவில்லை?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !