மேலும் செய்திகள்
கோயம்பேடு சந்தையில் 2,000 டன் காய்கறி தேக்கம்
14-Mar-2026
ஹூப்பள்ளி: '' போர் சூழ்நிலை ஏற்படும் போது, உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம்தான்,'' என ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த பா ட்டீல் தெரிவித்தார். ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி: மேற்காசிய பிராந்தியத்தில், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சர்வதேச அளவிலான விஷயம். இதுபோன்ற சூழ்நிலையில் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம். நாம் எதுவும் செய்ய முடியாது. நம் நாட்டில் மட்டுமின்றி, அனைத்து நாடுகளும் பிரச்னையை எதிர் கொண்டுள்ளன.சில பழங்கள், காய்கறிகள், உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் வியாபாரிகளும் உள்ளனர். பேடகி மிளகாய்க்கு நல்ல டிமாண்ட் உள்ளது. கடந்தாண்டு மிக அதிகமாக விற்பனையானது. அரசுக்கும் வருவாய் கிடைத்தது. வேறு நாடுகளுக்கும் பேடகி மிளகாய் ஏற்றுமதியாகிறது. பேடகி, பல்லாரி, ராய்ச்சூர் மார்க்கெட்கள் தரம் உயர்த்தப்படும். மாநிலத்தின் அனைத்து ஏ.பி.எம்.சி., மார்க்கெட்களுக்கு புதுப்பொலிவு அளிக்கப்படுகிறது. இங்குள்ள கடைகள் ஏலம் விடப்படுகின்றன. கடந்தாண்டு ஏ.பி.எம்.சி.,க்களில், 80,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
14-Mar-2026