உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மத உணர்வை புண்படுத்தியதாக ஏழு பேர் மீது வழக்கு

 மத உணர்வை புண்படுத்தியதாக ஏழு பேர் மீது வழக்கு

பெலகாவி: பெலகாவியில் நடந்த ஊர்வலத்தின் போது மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் அகண்ட ஹிந்து சம்மேளனம் அமைப்பின் ஊர்வலம் நேற்று நடந்தது. அப்போது, பீரனாவாடியில் ஊர்வலம் வந்தது. அச்சமயத்தில், வாகனத்தில் திறந்த வெளியில் நின்றபடி மஹாராஷ்டிராவை சேர்ந்த ஹிந்துஹர்ஷிதா தாகூர் வந்து கொண்டிருந்தார். அவர், அம்பு விடுவதை போல கையால் சைகை காட்டினார். இதை பார்த்த ஹிந்து அமைப்பினர் ஆரவாரம் செய்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. பீரனாவாடியை சேர்ந்த முஜாவர், ஊர்வலத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக பெலகாவி ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஹர்ஷிதா தாக்கூர், ஊர்வலத்தை ஏற்பாடு செய்த பெலகாவியை சேர்ந்த சுப்ரீத், ஸ்ரீகாந்த் கம்பாலே, பெட்டப்பா தாரிஹால், சிவாஜி ஷஹாபுர்கர், கங்காராம், கல்லப்பா ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி